மும்பை மாநகரம் எனக்கு தந்த முத்தான நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் முரளிதரன். தமிழ் ஆர்வமும், சமுதாய சிந்தனையும் மிக்க முரளி பழகுவதற்கு இனியவர். எங்களது உரையாடல் சினிமா , அரசியல், ஆன்மிகம் என்று தினசரி போல பல பரிமானம் கொண்டிருக்கும்.
ஒரு சமயம் "திருமணம் செய்ய சரியான வயது" என்பதை பற்றி விவாதிக்கும் போது, வது ஏற ஏற பக்குவம் வரும் .. ஆனா..ரெம்ப வயசான எதுவுமே வராதுன்னு சொல்லி முடித்த பிறகு, இரண்டு நிமிடம் ஆனது எனது சிரிப்பை அடக்க. இயற்கையாகவே தனக்குள்ள மொழி ஆர்வத்தை கவிதை எழுதி தீர்ப்பது இவரின் சிறப்பு. இதோ உங்கள் பார்வைக்கு ஒரு மாதிரி, இதன் உட்கரு காதல் எனினும் இவர் பயன்படுத்தும் தமிழ் சிறப்பு!!
/*****************************************/
காளை நான்
காதலை கூறிய போது
கருத்தில் கொள்ளாது
கருப்பாய் இருக்கிறேன் என்றாய்
கேவலமாய் …
பைத்தியகாரி !!
புரிந்துகொள்வாய்
புறக்கணித்து தவரென்று
உன்னிடம் வெறுப்பாய்
நடபோரிடம் நான்
நெருப்பாய் கொதிக்கும் போது
மட்டுமல்ல
நீ தவறாய் முள்ளைக்
கடக்கும் போது நான்
செருப்பாய் வரும்போது கூட ...
-- முரட்டுகவி முரளி
/*****************************************/
எங்களது மற்றொரு நண்பர் முஹமது , இவர் கவிதை யதார்த்தத்தை எடுத்து உரைப்பவை. முகமதின் "மொக்கை கவி" என்ற புனைபெயருடன் தனது படைப்புகளை எழுதி வருகிறார். இவ்வாறன வித்தியாசமான கவிதைகளை தங்கள் சிந்தனையில் மட்டுமே இயற்றி, வெளிஉலகிற்கு தர தயங்கும் தமிழர்களுக்கு இவர்கள் விதிவிலக்கல. இதனை வெளியட தயங்கும் காரணமும் விளங்கவில்லை. இவர்கள் இயற்றும் பண்ணும், பாடலும் இனி இங்கே இடம்பெறும். முரட்டுகவியும், மொக்கை கவியும் சிறந்த தமிழ் படைப்புகளை நமக்கு அளிப்பார்கள்.
4 comments:
:)
Good joke. Even I found it difficult to control the laughter.
So what did you guys decided as the right time?
He seems to be seamless in thinking in Tamil and equally good in witting it. I am planning to put down all his writings in the web.
murattu kaviyin kavithai azhagu.vaarthaihalai kaiyaanda vitham arumai.kavikku enathu paratuhal.
murattu kaviyin kavithai azhagu.vaarthaihalai kaiyaanda vitham arumai.kavikku enathu paratuhal.
Post a Comment