Sunday, January 16, 2011

புலம்பெயர்ந்த சிந்தனை !!


நளவெண்பா பயிலவேண்டாம் 

நன்னூல் நவிலவேண்டாம் 

குறளேதும் அறியவேண்டாம் 

பகுத்தறிவு பகலவேண்டாம்

அறிவியல் அறிய  வேண்டாம்

ஒழுக்கமேதும் இருக்கவேண்டாம் 

சமுதாய சிந்தனை வேண்டாம் 

மனிதமென்று ஒன்றும் வேண்டாம்

ஆனால் ...

கடல்தாண்டிய பணி வேண்டும்

கைநிறைய பணம் வேண்டும்

தமிழறிந்த  மடந்தை வேண்டும்

நம்வழி  மறக்க வேண்டும்

பிறர்வழி நடக்க வேண்டும்

வந்தேரியாய் வாழவேண்டும்

வளர்த்த மண்ணை வசைபாடவேண்டும்

இருந்தும் …

தம்மக்கள் தமிழ்பேச வேண்டும்

உடன்படா இவ்வாழ்க்கை விட்டு

என்றேனும் திருநாடு திரும்பவேண்டும் !!

10 comments:

Hariharan Ragunathan said...

I hope you comeback one day..

Sateesh said...

போதையிலிருந்து மீள்வது கடினம் தான் ...

Sateesh said...

http://nilavunanban.blogspot.com/2005/04/blog-post_19.html

எப்போதோ படித்தது ....

Guru said...

என்னவாய்ற்று? திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொன்ன இனம் அல்லவா தமிழினம்!

~குரு

Karthikeyan said...

@ஹரி : என்னைக்கும் நம்ம ஊர் தான் !!

@சதீஸ் : போதைய விட ... "வந்தேறிகளின் மனப்பான்மை" தான் இது ... :)

Karthikeyan said...

@குரு: திரவியம் தேடும் போது ..
கடல் தாண்டிய கலாச்சாரத்தோட கலக்க வேண்டிய நிலை இருக்குது :)

Sateesh said...

உண்மை தான்!!

Sateesh said...

தாயக ஈர்ப்பு இருக்கத் தான் செய்யும். சொர்கமே என்றாலும் பாட்டு அடிக்கடி ஞாபகம் வரும் ....

Priyamara said...

romba nalla eluthirukeenga! thamizhan'ndra pothuththuvam pulithuppoi, veli naadu'kku selvathu. Apparam, anga thamizhan -enbathu thaniththuvam'ah theriya aarambichathum, thamizhnaattu'ku thirumbida enguvathu saathaaranama aagiduchu. Ithu ellathayum pannittu, pin thonuvathu "ivai ellam artham'odu thaan seithoama?"

தமிழ் மொழி said...

அருமை
https://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_41.html?m=1